பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 417 பேர் கைது!

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 417 பேர் கைது!


பொலிஸாரினால் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதுதே குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 6 மணிமுதல் இன்று அதிகாலை 5 மணிவாரையிலான காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபானங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 121 கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment