அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிச் செயலாளர் அஷ்ஷைக் முர்ஷித் மௌலவி தொடர்பான செய்திகள் மீடியாக்களில் வந்ததைத் தொடர்ந்து எம் சமூகத்தில் பலர் முர்ஷித் மௌலவிக்கு எதிராக வீணாண விமர்சனங்களையும், அநியாயமான கெட்ட வார்த்தைப் பிரயோகங்களையும் பகிர்வதை அவதானிக்க முடிந்தது....
அல்லாஹ் எம்மைக்காப்பானாக...
நடந்த விடயங்களில் மீடியாக்களில் வந்த செய்திகள் மாத்திரமே நாம் அறிந்தது, சிறிய விடயங்களையும் பூதாகரமாக்கும் மீடியாக்களில் வெளிவராத பல அந்தரங்க விடயங்கள் நிறையவே உள்ளன.
அந்த வகையில் நடந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் சட்டரீதியாக அணுகி ஆய்வு செய்து தீர்க்கமான முடிவு பெறப்படும்.
அது அரசாங்கத்தின் வேலை...
பெரும்பான்மை சமூகம் ஒருபுறம் இருக்கட்டும், அவர்களுக்கு இச்செய்தி விருந்தாக இருக்கலாம், ஆனால் முஸ்லீம்களாகிய நாம் இவ்விடயத்தில் மிகுந்த நிதானத்தோடும் புரிந்துணர்வோடும் செயற்படுவது அவசியம்,
அங்கு நடந்த விடயங்களின் எதார்த்தம் மற்றும் அந்தரங்கங்கள் புரியாமல் வீணாக விமர்சிப்பது அறியாமை.
முர்ஷித் மௌலவியை பற்றி அறிந்தவர்கள், அவரோடு பழகியவர்கள் இதைப்புரிந்து கொள்வார்கள்.
முர்ஷித் மௌலவி பற்றிய இந்த ஒரு செய்தியை வைத்து அவரைப்பற்றி விமர்சிக்கும் நாம், அவர் இந்த சமூகத்திற்காக செய்த சேவைகளை கொஞ்சம் நினைவில் கொள்ளட்டும்.
இலங்கையில் முஸ்லீம் சமூகம் எதிர்கொண்ட பல்வேறு வகையான பிரச்சினைகளின் போதும் களத்தில் நின்று பாடுபட்டவர்கள்...
இரவு பகல் பாராமல் ஜம்மியாவினூடாக பல சமூக நல சேவைகளை மேற்கொண்டவர்கள்...
இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட பல நலவுகளை எல்லாம் மறந்து விட்டு வெறுமனே ஒரு விடயத்தை வைத்துக்கொண்டு அவரை தவறாக விமர்சிப்பது எவ்வளவு நன்றிகெட்ட சமூகம் என்பதை புரிந்து கொள்வோம்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக...
Allah muslimgala pazuhappan
ReplyDeleteஉண்மை விமர்சிப்பவர்கள் நாய்களைவிட கேவலமானவர்கள்.
ReplyDelete