தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் கொடுக்கும் பதினெட்டு விதமான சிறப்புகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
1 அவர் நோய் வாய்ப்பட்டு இருந்தால் அந்த நோயில் இருந்து நிவாரணம் கொடுக்கப்படும்
ஆதாரம்: நூல்: மராஸீலு அபீ தாவூது:
ஹதீஸ் எண்: 105
2 அவர் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம்: 271
3 கஷ்டங்கள், முஸீபத்கள் இருந்தால் அவை நீங்கிவிடும்
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ:
ஹதீஸ் எண்: 2863
4 அவருடைய செல்வத்தை ஷைத்தானுடைய சூழ்ச்சியிலிருந்து அல்லாஹ் பாதுகாத்துவிட்டான் எனவே தான் தர்மம் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது
ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது:
ஹதீஸ் எண்: 22962
5 அவருக்காக ஒரு மலக்கு துஆ செய்கிறார்.
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி:
ஹதீஸ் எண்: 1442
6 கெட்ட மரணத்தை விட்டும் அவர் பாதுகாக்கப்படுவார்.
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதி:
ஹதீஸ் எண்: 664
7 கப்ருடைய உஷ்னம் (அதாவது: வேதனை) முற்றிலும் நீக்கப்படும்.
ஆதாரம்: நூல்: அல் முஃஜமுல் கபீர்:
ஹதீஸ் எண்: 787
8 அவருடைய ஏதேனும் ஒரு பாவம் அல்லாஹ்வை கோபம் அடைய செய்து இருந்தால் அவரின் தர்மம் அந்த கோபத்தை அறவே தனித்துவிடும்.
ஆதாரம்: நூல்: சுனனு திர்மிதீ:
ஹதீஸ் எண்: 664
9 திடுக்கிட செய்யும் மறுமை நாளில் அவர் எந்த பயமும் கவலையும் இல்லாமல் மிகவும் நிம்மதியான நிலையில் இருப்பார்.
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 262
10 ரகசியமாக தர்மம் செய்தால் நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹுடைய அர்ஷ் அந்த நல்லடியாருக்கு நிழல் கொடுக்கும்
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி:
ஹதீஸ் எண்: 660
11 அவருக்கு நரகிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்:
ஹதீஸ் எண்: 1016
12 ஒரே விதமாக இருக்கும் பொருட்களிலிருந்து இரண்டு பொருளை
(எ.கா: இரண்டு ஆடை) தர்மம் செய்தால் அவர் சொர்க்கத்தில் விசேஷ வாசல் வழியாக உள்ளே செல்வார்.
ஆதாரம்: நூல்: ஸஹீஹுல் புகாரி:
ஹதீஸ் எண்: 1897
13 அவருக்கு மகத்தான நன்மை கொடுக்கப்படும்.
ஆதாரம்: சூரத்துல் ஹதீத்: வசனம் எண்: 7
14 அந்த நன்மைகளும் பல மடங்காக தரப்படும்.
சூரத்துல் பகரா: வசனம் எண்: 245
15 அவர் தர்மமாக எவ்வளவு அதிகம் கொடுத்தாலும் அவை அனைத்தும் அழிந்துவிடாமல் அல்லாஹ்விடத்தில் அவருக்கான மறுமையின் சேமிப்பாக இருக்கும்.
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம் :
ஹதீஸ் எண்: 2959
16 உண்ணும் உணவையே தர்மமாக கொடுத்தால் உள்ளத்தில் இலகுவான குணம் ஏற்படும்.
ஆதாரம்: நூல்: முஸ்னத் அஹ்மது:
ஹதீஸ் எண்: 7576
17 தர்மம் செய்வது இறையச்ச முடையவர்களின் குணங்களில் ஒன்றாகும்.
ஆதாரம்: சூரத்துல் பகரா: வசனம் எண்: 3
18 அவர் கொடுக்கும் தர்மத்தை பொருத்து அல்லாஹ்வும் அவர் செல்வத்தில் வளத்தை கொடுப்பான்.
ஆதாரம்: நூல்: ஸஹீஹ் முஸ்லிம்:
ஹதீஸ் எண்: 1029
அல்லாஹு தஆலா நமக்கும் இந்த பதினெட்டு சிறப்புகளையும் அடையச் செய்வானாக ஆமீன்...
No comments:
Post a Comment