மனைவியை கர்ப்பமாக்கிவிட்டால் மட்டும் போதாது சகோதரர்களே!
இதனையும் கொஞ்சம் பொறுப்புடன் கற்றுக் கொள்ளுங்கள்!
"நான் வயசுக்கு வந்து விட்டேன், எனக்கு
குடும்பம் நடத்த மட்டும் ஒரு பெண் இருந்தால் போதும்"
இந்த நிலைப்பாட்டில் தான்
இன்று பல வாலிபர்கள் திருமண பந்தத்தில் இனைகின்றனர். விளைவு,
மனைவியை கர்ப்பமாக்கி விட்டேன்
நான் ஆம்பள அவ்வளவு தான் என் கடமை முடிந்து விட்டது, இனி மனைவி பிள்ளையை பெற்று போடட்டும்,
என்ற சிறு பிள்ளைத்தனமான
குணம் உள்ளவர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். உண்மை தான் ஒருத்தியை கர்ப்பமாக்குவது மட்டும் தான் உமது வேலை,
ஆனால் அந்த கருவை சுமக்கும்
ஒவ்வொரு நொடியும் அந்த கரு குழந்தையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும்,
அவளது உடலுக்குள்ளும்,
உள்ளத்துக்குள்ளும் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்கிறது. அதனால் அவள் ஒவ்வொரு நேரத்திலும்,
ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வாள்,
வாந்தி எடுப்பாள், அதை தா, இதை தா என நேரம் கெட்ட நேரத்திலும் கண்டதை எல்லாம் சாப்பிடக் கேட்பாள்,
திடிரென அதை வேண்டாம் என்பாள்,
வயிறு புடைக்க சாப்பிட்டு முடிந்த கையோடு இன்னும் எதையவது சாப்பிட தா எனக் கேட்பாள்,
இன்னும் பலதை
அவள் செய்வாள், செய்து தான் ஆகுவாள் இதை எல்லாம் பார்த்து,
நடிக்கிறாள் நடிப்பு என அவளை ஏசுவது,
இவளுக்கு தின்னக் கொடுத்து கட்டுதில்ல என்று வருமானம் இருந்தும் கஞ்சத்தனம் காட்டுவது.
கொண்டு போய் கொடுத்தாலும் வாந்தி எடுப்பாள்
என எச்சித்தனமாக நடந்து கொள்வது. என நடந்து கொண்டாள் நிச்சயமாக,
நீங்கள் ஒரு ஆண் மகனாக வாழத் தகுதியற்றவர்,
ஒரு மனைவிக்கு கணவனாக, ஒரு பிள்ளைக்கு தகப்பனாகக் கூட அருகதையற்றவர்கள் என்பதை,
மிகவும் கௌரவமாக
கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்,
இன்னும் சிலர்
"மொத பிள்ளையா இது இரண்டாவது தானே" என்று ஒரு கதை கதைப்பார்கள்.
இது ஒன்றும் எக்ஸ்பீரியன்ஸ் (Experience)
வைத்து நடக்கும் செயல் கிடையாது. அவள் இரண்டாவது தடவையும் கருத்தரித்த விதம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம்,
அதற்காக
முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, முப்பது குழந்தைகளை சுமந்தாலும்
இந்த கட்டங்களை ஒரு பெண் சந்தித்தே ஆகுவாள் என்பதை அறிவுள்ள ஒவ்வொருவரும் புரிந்து இருப்பார்கள்.
நீங்கள் எப்படியோ.......?
வயதுக்கு வந்த தேவைக்காக
மட்டும் திருமணம் முடிக்காமல், அந்த தேவையை எப்படி எப்படி செய்து கொள்ளலாம் என்பதை மட்டும்,
வந்தவன், போனவன்,
ஹஸ்றத்மார் என்று கேட்டுத் திரியாமல் ப்ரெக்டிக்கலாக எப்படி வாழ்ந்து போகலாம் என்பதையும்,
கொஞ்சம் கருசனையுடன் கற்றுக் கொண்டு
திருமணம் செய்து கொள்ள போனால் விவாகரத்துகள் கொஞ்சமேனும் குறையும்.
Professional Pre Marriage Courses - திருமணத்திற்கு முந்திய வாழ்க்கைப் பாடங்களை,
மிகச் சிறந்த, உரிய தகுதிகளையுடைய
உளவளத்துறை நிபுணர்களால் கற்றுக் கொடுக்க எதாவதொரு முறை கொண்டு வரப்பட்டால் இந்த அவலங்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தாலும் கிடைக்கலாம்!
Superb 💙💙👌👌
ReplyDelete