ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும்.
யாரோ,எங்கோ,பிறந்தவள்...
"கபில்து" என்ற ஒத்தை வார்த்தையால்..
உன்னை நம்பி வந்தவளை எப்படி
பார்க்க வேண்டும்..
"தாய்க்கு பின் தாரம்" என்ற ஒரு
வரியில் அவளை நீ விளங்கி கொள்...
பாவம் உம்மா , வாப்பா கூட இருந்தவள்..
உனக்காக வந்தாள் என்றால் அவளுக்காக நீ என்ன செய்ய போகிறாய்....
அடுக்கு மாடி கட்டிடமோ, பவுன் பவுனா
தங்க நகையோ, வாய்க்கு ருசி
சாப்பாடோ, ஒன்னும் கொடுக்க வேண்டாம்....
அன்பா ஒரு வார்த்தை போதும்.....
உழைத்த கடுப்பை அவளிடம்
காட்டாதே அவள் பார்க்கும் வேளையில்
ஒரு சதவீதம் கூட நீ செய்யவில்லை..
நாள் பூரா உழைக்கும் நீ..
கொஞ்ச நேரம் அவளோடு செலவிடு..
இரும்பெல்லாம் தூக்கியவன்
இரு கொட தண்ணீருக்கு தினருகிறாய்..
காலமெல்லாம் குடம் தூக்கும் அவள்
அருமையை நினைத்து பார்..
வயிற்ற வலி என்றவுடன்..
துடியாய் துடிப்பாயே..
உனக்காக வயிறே கிளிக்கப்பட்டாள்..
அவளை கொஞ்சம் நினைத்தாயா..
அவளுக்கு ஊட்டி விடு...
அவள் வைய்த்த உணவையும்
சரி,எழும்பையும் சரி நீ சாப்பிடு..
நாயகத்தின் சுன்னத்தை நிலைநாட்டு..
மனைவியோடு விளையாடு
ஆனால் ஜெயிக்க நினைக்காதே விட்டுக்கொடு...
மனைவியை கேட்காமல் முடிவெடுக்காதே...
எக்காரணம் தொட்டும் அடித்துவிடாதே..
பாவம் பலகீனமானவள்...
உனக்காக பல பலமான வேளையையும்
செய்கிறாள்....
மற்றவர்கள் பொறாமை படும்
அளவுக்கு உன் மனைவியை கவனித்து
கொள்...
பிள்ளைகளின் முன் மனைவியை
திட்டாதே.... முதலில் திட்டாதே..
வாழ்க்கையில் ஒரு முறையாவது
எப்படியாவது அவளை ஹஜ்ஜிற்கு
கூட்டி செல்... அதற்காக துஆ செய்..
அவளை விட்டு பிரிந்திருக்காதே..
அவளோடு கண்களால் பேச பழகி
கொள்..
தவறு இழைத்து விட்டாலும் அதை
மன்னித்து மறந்துவிடு..
ஏனெனில் தவறு செய்யாதவன் மனிதனே கிடையாது....
இன்பத்திலும்,துன்பத்திலும்
இம்மையிலும், மறுமையிலும்
சொர்க்கத்தில் அவளோடு கை கோர்த்து
இருக்க... கை சேர்த்து பிரார்தனை செய்..
அல்லாஹ் நம் அனைவரின் வாழ்க்கையையும் சரி செய்வானாக...
நேர்வழி காட்டுவானாக....
Masha allah. Very nice advice.. Superb
ReplyDelete