தேடலில் கிடைத்த அருமையான கதை
பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காமை
வேலை முடிந்து மாலையில் தாமதமாகவும் சோர்வாகவும் வரும் தந்தையின் அறையில் சிறு வயது மகன் வந்து அப்பா....! ஒரு மனிநேரத்தில் நீங்கள் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?. சோர்வாக இருந்த தந்தைக்கு மகனின் இந்த கேள்வி கோபத்தையே கிளறியது.
"உன் வேலையை பார், தேவையில்லாத கேள்வி கேட்காதே" என்கிறார்.
விடாப் பிடியாக மகன் நச்சரிக்க 'ஒரு மணி நேரத்தில் 100 ரூபாய்" என்கிறார் தந்தை.
ஐம்பது ரூபாய் கடன் தருவீங்களா அப்பா"என்ற மகனின் கேள்வி கோபத்தை உண்டாக்க "நான் மாடாக உழைக்கிறேன். விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தானே நீ காசு கேட்கிறாய்? போ... உன் அறைக்கு, காசும் இல்லை ஒன்றும் இல்லை " என்று போ உன் அறைக்கு "என்று கோபமாகக் கத்த பயத்துடன் திரும்பி விடுகிறான்.
அப்புறம் தான் யோசிக்கத் தொடங்கினார் தந்தை. உண்மையில் மகனுக்கு தேவையிருந்தால்.. இதுவரை அவன் என்னிடம் கேட்டதே இல்லையே என்று ஐம்பது ரூபாய் உடன் மகனின் அறைக்குப் போய் மகனை சமாதானப் படுத்துகிறார்
பின் 50 ரூபாயை நீட்ட; வாங்கிய மகன் தலையணைக்கு அடியிலிருந்த வேறு ஒரு 50 ரூபாயை எடுக்கிறான்.
அவ்வளவுதான் கோபம் தலைக்கேறிய தந்தை ஓங்கிவிடுகிறார் கன்னத்தில் ஓர் அறை.
பணத்தை வைத்தே என்கிட்ட கேட்டாயா எதுக்கு? அழுதுகொண்டே அப்பா
என்னிடம் போதுமான அளவுக்குப் பணம் இல்லை அதனால்தான் கடன் கேட்டேன் என்றான்.
எதற்கு?
பணத்தை நீட்டியபடி அப்பா என்னிடம் 100 ரூபாய் இப்போ இருக்கு உங்களின் 1 மணி நேரத்தை நான் விலைக்கு வாங்கலாமா?
நாளைக்காவது சீக்கிரம் ஒரு மணி நேரத்துக்கு முன்பே வாருங்கப்பா.. உங்களுடன் ஒரு தடவையாவது இரவு உணவை சேர்ந்து சாப்பிட விரும்புகிறேன் அப்பா. என்கிறான் மகன்.
சுக்கு நூறாய் உடைந்த தந்தை அழுது ,மகனை அணைத்து அவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்.
நம் குழந்தைகளுடன் செலவு செய்ய மறந்த நேரம் திரும்ப வரவே வராது.
No comments:
Post a Comment