அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹபுகஸ்தலாவ கிளையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அல் ஹம்து லில்லாஹ்
எமது ஊரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எமது ஹபுகஸ்தலாவ ஜம்இய்யா கிளை நிர்வாகத்துடன் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதாவது கடந்த காலங்களை போலில்லாது இனிவரும் காலங்களில் எமது கிளை சிறப்பாக இயங்கி எமது ஊரின் முன்னேற்றத்திற்கு முயற்சிக்க வேண்டும்.
சில ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் இத்துடன் இணைக்கப்படுகின்றது👇
1. கிளையின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
2. ஊர் உலமாக்களை கிளையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
3. பள்ளிவாசல் நிர்வாகங்களை கிளையே வழிநடத்த வேண்டும்.
4. இப் பிரதேசத்தில் சமூக, சமய, கலாசார விடயங்களை திட்டமிட்டு நடாத்த வேண்டும்.
5. சர்வ மத விடயங்களை திட்டமிட வேண்டும்.
6. உலமாக்களுக்கான நலன்புரித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
7. வாராந்த குத்பாக்களுக்காக அனைத்து பள்ளிவாயல்களுக்கும் தலைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
8. எமது கிளையின் முன்னெடுப்புக்கள் யாவும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட வேண்டும்.
9. கிளையின் கூட்டங்கள் பொதுவாக ஒரு மஸ்ஜிதில் நடாத்தப்பட்ட வேண்டும் (வேறு இடங்களை முற்றாக தவிர்க்க வேண்டும்).
10. மாதாந்த கூட்டங்களை திட்டமிடப்பட்ட (நேரம் குறிக்கப்பட்டு ஆரம்பம் முதல் இறுதி வரை ஒருங்கிணைக்கப்பட்ட) கூட்டமாக அமைய வேண்டும்.
11. ஊர் மஸ்ஜித் இமாம்கள் கிளை நிர்வாகத்தின் கீழ் வழிநடத்தப்பட வேண்டும்.
12. பெண்களுக்கான மார்க்க வழிகாட்டல்களை ஆலிமாக்களை கொண்டு நடாத்தப்பட்ட வேண்டும்.
13. வாலிபர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்குதல்.
14. பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் விடயத்தில் நிர்வாகங்கள், ஊர் மக்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும்.
15. ஊர் மக்களை ஒற்றுமைப் படுத்தும் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துதல்.
16. மத்ரஸாக்களில் ஓதி தமது படிப்பை இடைநிருத்திய ஹாபிழ்கள் மற்றும் ஏனையவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டு அவர்கள் நெரிப்படுத்தப்பட வேண்டும்.
17. இனிவரும் காலங்களில் மஸ்ஜித் நிர்வாகத் தெரிவின் போது கிளை சார்பாக ஓரிருவர் நிர்வாகத்துக்கு உள்வாங்கப்பட வேண்டும்.
18. கிளையின் அங்கத்துவத்துக்காக தனியான விண்ணப்பம் கோரப்பட வேண்டும்.
19. உப குழுக்களுக்கு தேவையான துறைசாரந்தவர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
20. கிளைக்கான பிரத்தியேக தொடர்பாடல் அதிகாரியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
21. அவசரமாக கிளைக்கு ஒரு காரியாலயம் அமைக்கப்பட வேண்டும். அதுவரை மேலே கூறப்பட்ட முறையை பின்பற்றலாம்.
குறிப்பு
அகில இலங்கை ரீதியில் உதாரணம் காட்டப்படக்கூடிய ஒரு சிறந்த கிளையாக இயங்குவதற்கு முயற்சித்தல்.
வல்லவன் அல்லாஹ் நம் அனைவரையும் சத்திய தீனுக்காக செவ்வனே சேவை செய்பவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்புரிவானாக, ஆமீன்.
இவன்
மபாஸ் (ஹாமிதி),
ஹபுகஸ்தலாவ.
No comments:
Post a Comment