ஒரு தசாப்தம் பின்னோக்கிப் பார்க்கிறேன்
மர்ஹூம் நியாஸ் மௌலவியின் ஞாபகர்த்த தினம்
----------------------------------------------------------------
நெருக்கமாகப் பணியாற்றிய இரம்மியமான தருணங்கள்
ஒன்றாகக் கழித்த இனிமையான பொழுதுகள்
கலந்து பேசிய கனதியான விடயங்கள்
ஓய்வின்றி ஒன்றாக ஓடிய ஓட்டங்கள்
கூடியிருந்து எழுதிய எழுத்துக்கள் பேசிய பேச்சுக்கள்
ஓர்மத்துடன் முன்னெடுத்த சமூக நலத் திட்டங்கள்
பறையடிக்காமல் சாதித்த பாரிய சாதனைகள்
கத்தியின்றி இரத்தமின்றி சப்தமின்றி பெற்ற வெற்றிகள்
பத்தாண்டு சென்ற பின்னும் பளிச்சென நினைவில்
பசுமரத்தாணி போல் பசுமையாக நிற்கின்றன
என் வீட்டு கற்களும் படுத்துறங்கும் கட்டில்களும்
அமர்ந்து பேசும் கதிரைகளும் வைத்தெழுதும் மேசைகளும்
சாளரம் வழியே புகுந்து சடுகுடு விளையாடிச் செல்லும் தென்றலும்
வழமை போல் இன்றும் அவர் நினைவை மீட்டத் தவறவில்லை
முகவரியிழந்த நம் சமூகம் அவரை ஞாபகிக்க
முக நூலில் இன்று அவர் படத்தை முகமாக்க
அவர் விட்ட இடத்தை ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன்
அது இன்னமும் வெற்றிடமாய் வெறிச்சோடிக் கிடக்கிறது
அபூ அவ்வாப்
2020.07.04
No comments:
Post a Comment