தந்தை மகனுக்கு எழுதியது....


💗தந்தை மகனுக்கு எழுதியது....

தலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய 
என் தங்க மகன் என் தலைக்கு மேல் 
வளர்ந்து ஆளாகி நிற்கின்றாய்.! நான் போட்ட சிறு கோடுகளில் பயணித்து பெரும் சாலை அமைத்து சாதித்திருக்
கின்றாய். நீ வளர்ந்து நிற்பதைப் பார்த்து  பெருமிதம் கொள்ளும் முதல் ஆள் நான்
தான். 

நீ உன் குடும்பத்தை வழி நடத்தும் விதத்திலோ உறவுகளை பேணுவதிலோ
உன்னையோ உன் துணைவியையோ குறைத்து மதித்து விடக்கூடாது என்கிற அக்கறையிலும், எந்த நிலையிலும் நீ
தோற்றுவிடாதிருக்கவும் என் அனுபவ பாடங்களை உன்னிடம் சொல்வதற்கு சில நேரம் முயலுவேன். 

ஒரு பயம் எனக்கு; என்றாவது ஒருநாள் 
எல்லாம் எனக்குத் தெரியும். என் விசயத் தில் நீங்கள் தலையிடாதீர்கள் மரியாதை கெட்டுவிடும் என்று சொல்லிவிடுவாயோ என்று.!

மகனே மறந்தும் அப்படி சொல்லிவிடாதே 
நான் இதயம் உடைந்து இறந்து போனது
போல் ஆகி விடுவேன்.!!

சின்ன வயதில் நீ அடிக்கடி கேள்விகள் கேட்பாய்

நானும் நீ கேள்வி கேட்பதை 
எண்ணி சந்தோஷத்துடன் சலைக்காமல் பதில் சொல்வேன்.

நீ என்னிடம் கேள்விகள் கேட்டதுபோல் என் வயதான காலத்தில் உன்னிடமும் நான் உன்னைப்போல் கேள்விகள் கேட் கக் கூடும். 

அப்போது கத்தாதே வாயை மூடு என்று சொல்லி விடாதே வயோதிக வலிகளை
சுமந்து போராடும் என்னால் அந்த வலி யை தாங்கிக்கொள்ளவே முடியாது.! 

நீ நினைவற்று உடல்நலமில்லாமல் உபா
தைகளால் போராடிக்கொண்டிருக்கும் போது பதட்டத்தோடு பல்வேறு மருத்துவர் களை பார்த்து நீ குணமடைய இறையை
இறைஞ்சி பாசத்தோடு பாடுபட்டவன் நான். 

உன்னைப்போலவே நானும் நினைவி ழந்து நோய்வாய்பட நேரலாம் அப்போது விரக்தியடையாதே விரயச் செலவு வைப் பதாய் வெதும்பாதே. 

நீ கல்விப் பயிலச் செல்லும் வேளை உன்
காலணியை கவனமாய் போட்டுவிட்டு நீ
பாடசாலை செல்வதைப் பார்த்து ரசித்த
வன் நான்.

தள்ளாத வயதில் நானும் காலணி போட முடியாமல் தடுமாறக்கூடும் என்னைத் தாங்கிப்பிடித்து காலணிகளை போடு
வதற்கு தயக்கம் காட்டாதே 

வீடெல்லாம் நீ இறைத்து வைத்த சோற்று பருக்கைகளை உன்னைக் கடிந்துகொள் ளாமல் உன் தாயும் நானுமாய் எங்கள்  விரல்களால் கூட்டி அள்ளுவோம் 

என் முதிர் வயதில் என் வாய்க்கொண்டு செல்லும் உணவு நடுக்கத்தால் தரையில் விழக்கூடும்.

தவறியும் என்னை திட்டாதே தாங்கிக் கொள்ள முடியாது மகனே  என்னால்.

அறியாத வயதில் நீ என்மீது சிறுநீர் கழித்துவிடும்போது அதை பன்னீர் 
என பரவசப்பட்டவன் நான்

என் சிறு நீர்பை பலம் இழந்ததனால் சில
நேரம் என்னையும் அறியாமல் சிறுநீர்  நடையிலோ,படுக்கையிலோ சிந்தியி ருக்க கூடும் 

அடச்.......சீ  என்று முகம் சுழிக்காதே உன் தாயின் முந்தானையில் உன் சிறுநீரின் மணம் இன்னும் மறையவேயில்லை.!

யாருக்கும் தொந்தரவு தராமல் திராணி இருக்கும்போதே நான் மரணிக்கத்தான் விரும்புகிறேன். இறைவன் என்ன நாடி
இறுக்கிறான் என்பதை நான் அறியேன் 

மறந்தும் முதியோர் இல்லத்தில் என்னை மூழ்கடித்துவிடாதே 

கால் வலிக்கிறதென்று நீ கலங்கி வரும்
வேளை உன் பாதம் பிடித்து விடுவதில் பரவசம் அடைந்தவன் நான். 

நீதிக் கதைகள் பல சொல்லி உன்னைத் துயிலச்செய்வதில் மகிழ்ச்சியடைந்தவன் நான்.நீ அழுகும் போதெல்லாம் பதறிப்
போய் நான் உன்னை பாசத்தோடு அரவ ணைத்து என் மடியில் வைத்து தாலாட்டு பாடியதும்  உண்டு. 

தள்ளாத என்னை உன் மடியில் வைத்து ஆறுதல் கூறி அரவணைக்க வேண்டும் என என் மனம் விரும்பும் என்பதை நீயும் புரிந்துகொள்.

அதை நீ புரிந்துகொண்டால்  போதும்.என் 
பிள்ளை அருகிருந்து இதமாக தலை கோதும் இந்த சுகம் எனக்கு முதியோர் இல்லத்தில் கிடைக்குமா.?

செல்லுமிடமெல்லாம் உன்னை கூட்டிச்
செல்வதில் நான் பெருமைகொள்வேன் நீயோ செல் பேசியுடன் இருப்பதில்  அல்லவா பெருமைகொள்கிறாய். மகனே நேரம் அதிகமாகி விட்டது.இதை படிப்பது
கூட உனக்கு பாரமாக ஆகிவிடும். 

செல்லும் கையுமாய் திரியும் நீ என் உயிர் செல்லும் நேரமாவது நீ அந்த செல்பேசி யை தூரமாக்கிவிட்டு  என் பக்கத்தில் வந்து அமர்வாய்.

இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய்,
என்னை அறிவாய், என்னை நேசிப்பாய் 
என்கிற நம்பிக்கையில் இல்லை.!!

ஒவ்வொரு பெற்றோரின் உணர்வும் இது தான் என்பதை நீயும் உணரவேண்டும். இதை உன் பிள்ளை உன்னை விட்டு    இப்படி தூரமாகும்போது உணர்வாய்.இப்போ தே நீ பெற்றோர் மனம் மகிழ நடந்தால் தான் உன் பிள்ளை உன்னை மதித்து உன் மனதை மகிழச்செய்வான்.

இதை படித்ததும் நீ பொழுதுபோக்காக இருந்ததை நினைத்து அழுவாய் என்று எனக்குத் தெரியும் அழாதே மகனே.! இப்போதே பெற்றோரின் பெருமை அறியாதவர்களுக்கு இதை அனுப்பி வைத்தாவது உன் கடமையை செய்து விடு.அதுபோதும் நன்றி மகனே.!!

என்னன்பு நெஞ்சங்களே.! இப்போதாவது தாய் தந்தையரின் உணர்வுகளை மதித் திடுவோம்.!! ஈருலகிலும் ஏற்றம் பெறுவோம்.!!!*

🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🍁

No comments:

Post a Comment