சிந்தனை செய் மனிதா! சிந்தனை செய்



சிந்தனை செய் மனிதா!
சிந்தனை செய்


✨உன் பாதம்🦶🏻✖ துண்டிக்கப்பட்டால் உன்னால் எளிதாக நடக்க முடியுமா?

✨உன் கால்கள்🦵🏻✖ முறிந்துவிட்டால் காலுன்றிதான் நடக்கத்தான் முடியுமா?

✨பல் வலியால்🦷 தூக்கம்😴 உன்னை விட்டு பறந்து சென்ற பிறகு கண் மூடி நிம்மதியாக உன்னால் தூங்க முடியுமா?

✨காதுவலியால்👂🏻 அவதிப்படும்போது உன்னால் சுவையான😋 உணவையோ,நாவூறும் இனிப்பையோ உண்ண முடியுமா?

💫உன் காதைப்பார்!👂🏻
செவிட்டுத் தன்மையிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறது!

✨உன் கண்ணைப்பார்!👀
குருட்டுத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது!

✨உன் அழகிய தோலைப்பார்!👤
தொழுநோயில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது!

✨உன் புத்தியை கொஞ்சம் யோசித்துப்பார்!🧠
பைத்தியம்,மூளை வளர்ச்சி குறைவின்றி ஆரோக்கியமாக உள்ளது!

🌟உன் கண்கள் உஹத் மலையளவு தங்கத்துக்கு ஒப்பானது என நீ கணக்கிடுவாயா?

🌟சஹ்லான் என்ற மலையின் எடைக்கு வெள்ளியைப்பெற்றுக்கொண்டு உன் கேட்கும் திறனை விற்க விரும்புவாயா?

🌟அழகான பல கோட்டைகளுக்குப் பகரமாக உன் நாவை விற்று ஊமையாய் வாழ நினைப்பாயா???

🌟வைர,வைடூரிய மாலைகளை எடுத்துக்கொண்டு உனது கைகளை விற்கத்தான் முன் வருவாயா?

🌟எல்லா அருட்கொடைகளும் உனக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன!
அதிகமாக பொக்கிஷங்களுக்கு சொந்தக்காரி நீ!!!

🌟இதை உனக்கு உணர்த்த ஆள் இல்லாமல் சோகமாக,வருத்தமாக,கவலையாக இருப்பதாக நீ தான் எண்ணிக்கொள்கிறாய்!

இவற்றை எல்லாம் அறியாமல் நீ நன்றி🤲 செலுத்த மறந்துவிட்டாய்!

🌟இதனால் உனக்கு தொழுகையில் உயிர்ப்பு இல்லை!
குர் ஆன் ஓதுதலில் ருசி இல்லை!
தர்மத்தில் நாட்டம் இல்லை!
அடுத்தவரின் துன்பத்தை உணர்வதில்லை!

மனிதா!👤
சிந்தித்துப்பார்!🤔
நன்றி செலுத்து!🤲

"நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்"

(அல்குர்ஆன்)

No comments:

Post a Comment