ஜுமுஆவுக்கு 50 பேரை அனுமதிப்பது- சில ஆலோசனைகள்
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
அஷ்ஷைக் பளீல் (நழீமி)
இன்ஷா அல்லாஹ் நாளைய ஜுமுஆ தொழுகைக்கு 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற நிலையில் எப்படி அந்த எண்ணிக்கையினரை தெரிவு செய்வது என்பது பற்றி பள்ளி நிர்வாகங்கள் கடுமையாக சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
சில ஆலோசனைகள்:-
இன்று பள்ளிவாயலில் பின்வரும் அறிவித்தலை தொங்கவிட முடியும். ஒலிபெரிக்கியிலும் அறிவிக்கலாம். Social Media மூலமும் பரப்பலாம்.
1. இன்ஷா அல்லாஹ் பள்ளிவாயல் ஜுமுஆ தொழுகைக்காக வெள்ளிக்கிழமை பகல் 11.30 மணிக்கு திறக்கப்படும்.
2. முதலில் சமூகம் தரும் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
3. அவர்கள் ஒரு வாயிலால் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவதுடன் 50 பேர் உள்நுழைந்தவுடன் பள்ளிவாயல் மூடப்படும்.
4. அதன் பின்னர் வரும் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
5. ஊரில் உள்ள தக்கியாக்களிலும் ஜுமுஆ நடைபெறும். அங்கும் இதே ஒழுங்கு பின்பற்றப்படும்.
6. பள்ளிக்கு வர முன் வீடுகளிலேயே வுளுசெய்து கொள்ளவும்.
7. முகக்கவசம் அணிந்து வரவும்.
8. வீட்டிலிருந்து சுத்தமான முஸல்லாவை எடுத்து வரவும்.
9. பள்ளிக்குள் நுழைந்தது முதல் வெளியேறும் வரை எவருடனும் கைலாகு செய்வது கட்டித் தழுவுவது வீணாக கதைத்துக் கொண்டிருப்பது என்பவற்றை முற்றாக தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. ஒரு மீட்டர் இடைவெளியை பள்ளிக்குள் எப்போதும் பேணிக் கொள்ளுங்கள்.
11. சிறார்கள் நோயாளிகள் போன்றோர் வருவது தடுக்கப்படும்.
12. தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாயல் மூடப்படும்.
மேற்படி விடயங்களில் பள்ளி நிர்வாகத்திற்கு பூரண ஒத்துழைப்பை நல்கும் படி அன்பாக வேண்டிக் கொள்கிறோம்.
அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!
No comments:
Post a Comment