பள்ளிவாயல்களில் 2.1 மில்லியன் ரூபா சம்பள நிலுவை ..
பள்ளிவாயல்களில் முஅத்தின் மற்றும் கதீப்மாருக்கான சமபளம் 2.1 மில்லியன் ரூபா வரையில் நிலுவையில் உள்ளதாக முஸ்லிம் கலாசார திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மே மதச் சம்பளம் பற்றிய நிலுவை விபரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது.
மே மாதம் 6ம் திகதி 13.3 மில்லியன் ரூபாய்களாக இருந்த சம்பள நிலுவை மே மாதம் 22ம் திகதி 2.1 மில்லியன் ரூபாய்களாக குறைந்துள்ளமை திருப்திகரமாகவுள்ளதாக கூறப்பட்ட போதும் 10 மாவட்டங்களில் சம்பள நிலுவை இருப்பதாக கூறப்பட்டது.
10 மாவட்டங்களில் 2.1 மில்லியன் ரூபா சம்பள நிலுவை இருப்பதாக கூறப்பட்டது.
பதுளை 128500 ,கொழும்பு 743750 ,காலி 303000,கம்பஹா 174000, குருநாகல் 103000,மாத்தளை 337000,மொனராகலை 25000,நுவரெலியா 68000,புத்தளம் 20000,திருகோணமலை 209500 ஆகிய 10 மாவட்டங்களில் 2.1 மில்லியன் சம்பள நிலுவை இருப்பதாக கூறப்பட்டது.
No comments:
Post a Comment