முஸ்லிம் சட்டத்திருத்தம் குறித்து, அவசரம் காட்ட வேண்டாம் - ACJU



முஸ்லிம் சட்டத்திருத்தம் குறித்து, அவசரம் காட்ட வேண்டாம் - ACJU

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தம் குறித்த முன்மொழிவுகளை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு அவசரம் காட்ட வேண்டாம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் மேற்கொள்வதற்கு ஏதுவான வகையில் இருதரப்புச் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ் ஷேய்க் எம்.எம்.ஏ.முபாரக் எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment